1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 21 ஜூன் 2017 (22:38 IST)

சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி

உச்சநீதிமன்ற நீதிபதிகளை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து தலைமறைவான கர்ணனை நேற்று கொல்கத்தா போலீசார் கோவையில் கைது செய்து இன்று கொல்கத்தா சிறையில் அடைத்தனர்.



 


இந்த நிலையில் சிறையில் இருந்த கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் உடனடியாக அவரை சிறை காவலர்கள், அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தற்போது கர்ணனின் உடல்நிலை குறித்த தகவல் வெளிவராததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.