1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (08:39 IST)

ஜான்சன் பேபி பவுடரின் உற்பத்தி உரிமம் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி!

johnson
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரின் உரிமத்தை மகாராஷ்டிரா மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடர் இந்தியா முழுவதும் பிரபலம் என்பதும் இந்த பவுடரை கிட்டத்தட்ட அனைத்து பெற்றோர்களும் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த பவுடரில் பயன்படுத்தப்படும் சில பொருள்கள் சரும பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து பவுடர் மாதிரிகளைச் சோதித்து பரிசோதிக்கப்பட்டது
 
இந்த பரிசோதனை முடிவில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த பவுடரை பயன்படுத்தினால் சரும பாதிப்பு மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டது 
 
இதனை அடுத்து ஜான்சன் &  ஜான்சன் நிறுவனத்தின் ஜான்சன் பேபி பவுடர் உற்பத்தி உரிமத்தை மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது