வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 பிப்ரவரி 2023 (13:29 IST)

பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதில்லை: சென்னையில் ஜேஎன்யு துணைவேந்தர் அறிவிப்பு!

jnu
பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதில்லை: சென்னையில் ஜேஎன்யு துணைவேந்தர் அறிவிப்பு!
பிபிசி ஆவண படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னையில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஜேஎன்யு துணைவேந்தர் சாந்திஸ்ரீ பண்டிட், ‘எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் பிபிசி ஆவணப்படத்தை எங்கள் பல்கலைக்கழகத்தில் திரையிட அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார். 
 
மேலும் யாருடைய தனிப்பட்ட உரிமைகளையும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை என்றும் எதிர் கருத்து உடையவர்கள் இருப்பதால் இந்த பிபிசி ஆவண படத்தை திரையிட அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் தொல்காப்பியம் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றும் இதற்காக ரூபாய் 10 கோடி நிதி வழங்கிய தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Mahendran