1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2017 (05:51 IST)

இன்றுடன் முடிகிறது ஜியோ சலுகை: அடுத்து என்ன செய்ய வேண்டும்?

கடந்த ஆறு மாதங்களாக எண்ணற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்கள், இண்டர்நெட் டேட்டா என இலவசமாக பெற்று வந்த ரிலையன்ஸ் ஜியோ பயனாளிகளுக்கு ஒரு சோகமான செய்தி தான். ஆம் இன்ருடன் இந்த இலவச சேவைகள் முடிவடைகிறது.



 


இதனையடுத்து  அந்நிறுவனம் குறைந்த விலையில் வாடிக்கையாளர்கள் சேவையை பெற, ஜியோ பிரைம் திட்டம் என்ற ஒன்றை ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்பொழுது ஜியோ 4ஜி சிம் சேவையைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களும் இனிமேல் ஜியோ சிம் வாங்குபவர்களும் ஜியோ பிரைம் உறுப்பினர் ஆக வேண்டும். இன்று இரவிற்குள் மை ஜியோ ஆப், ஜியோ இணையதளம், ஜியோ ரீசார்ஜ் முலமாக ரூபாய் 99 செலுத்தி ஒரு வருடத்துக்கு ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகலாம். ஜியோ பிரைம் உறுப்பினர் ஆன பிறகு, மாதாந்திர சேவைகளுக்காகப் பல்வேறு திட்டங்களை ஜியோ அறிவித்துள்ளது. இந்த திட்டங்கள் ரூ.19-ல் தொடங்கி ரூ.9999 வரை உள்ளன.

ஜியோ பிரைம் உறுப்பினர் மாதம் ரூ. 303 செலுத்தி இப்பொழுது இலவசமாக தற்போது பெற்று வரும் அதே சேவையை பெறலாம். அதாவது, ரூ.303 செலுத்தினால் தினமும் 1 ஜிபி டேட்டா 4-ஜி வேகத்தில் கிடைக்கும்.

போஸ்ட் பெய்ட் ஜியோ சிம் வைத்திருப்பவர்களும் ஜியோ பிரைம் உறுப்பினராக வேண்டும். ஆனால் போஸ்ட் பெய்ட் உறுப்பினர்களுக்கு ரூ.303, ரூ.409 மற்றும் ரூ. 999 என மூன்று மாதாந்திர சலுகைகள் மட்டுமே உள்ளது. ஜியோ பிரைம் உறுப்பினர் ஆகாத வாடிக்கையாளர்களுக்கும் சேவை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஜியோ பிரைம் உறுப்பினர்களை விட, அதிக பணம் கட்ட வேண்டியதாக இருக்கும்.