ஐஸ்வர்யா ராயின் சர்ச்சைக்குரிய நகைக்கடை விளம்பர படம்


வீரமணி பன்னீர்செல்வம்| Last Modified வியாழன், 23 ஏப்ரல் 2015 (17:11 IST)
நகைக்கடை விளம்பரத்தில் இனவெறியை தூண்டும் வகையில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார் என்ற சர்ச்சை பூதாகரமாகியுள்ளது.
 
 
சர்ச்சைக்குள்ளான அந்த விளம்பரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நகை அலங்காரத்தில் ஜொலிக்க, அவருக்கு அருகே ஒரு கறுப்பினக் குழந்தை குடையை உயர்த்திப் பிடித்தபடி நிற்பதுபோல் உள்ளது.
 
இதன் மூலம் ஐஸ்வர்யா ராய் இனவெறியை தூண்டும் வகையில் நடித்துள்ளதாகவும், குழந்தை தொழிலாளர் முறையை ஆதரிப்பதுபோல் நடந்து கொண்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
 
இது தொடர்பாக ஐஸ்வர்யா ராய்க்கு சமூக ஆர்வலர்கள் சிலர் கடிதம் எழுதியுள்ளனர். அதில், ஐஸ்வர்யா ராய் உடனடியாக அந்த விளம்பர ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
 
இதனிடையே, இந்த விளம்பர படத்தை நீக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :