1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (15:53 IST)

கன்னடத்தில் வெளியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகம்!!

மறைந்த முன்னாள் தமிழக முதல் அமைச்சர் மற்றும் நடிகையான ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம் கன்னட மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. 


 
 
கன்னட மூத்த பத்திரிக்கையாளர் என்.கே.மோகன்ராம் இப்புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது பெங்களுரில் வசித்து வரும் அவர், அம்மா ஆதா அம்மு (அம்மு என்கிற ஜெயலலிதா) என்ற பெயரில் இந்த் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ‘‘அம்மா, ஆதா, அம்மு: ஜெயலிலதா” என்ற பெயரில் நான் எழுதி வெளியிட்டு உள்ளேன். 
 
ஜெயலலிதாவின் குடும்ப பின்னணி, இளமைப் பருவம், சினிமா பிரவேசம், அரசியல் வாழ்க்கை, குணநலன்கள், அவரது மரணம் ஆகிய 6 பகுதிகளாக பிரித்து இந்த புத்தகம் எழுதப்பட்டு உள்ளது.
 
262 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் பல இடம் பெற்று உள்ளன என தெரிவித்தார்.