1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : சனி, 27 ஆகஸ்ட் 2016 (10:02 IST)

ரூ.500 இருந்தால் நீங்களும் சிறைக்கு செல்லலாம் : புதிய திட்டம் அறிமுகம்

ரூ.500 இருந்தால் நீங்களும் சிறைக்கு செல்லலாம்

முன்பதிவு மூலம் சிறைக்கு சென்று ஒரு நாள் முழுவதும் சிறையை பார்வையிடும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


 

 
சிறை எப்படி செயல்படுகிறது?. அங்கு கைதிகள் எப்படி செயல்படுகிறார்கள்?. அவர்களுக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்படுகிறது? என்பதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பலருக்கும்  இருக்கிறது. 
 
ஆனால் குற்றம் ஏதும் செய்யாமல் சிறைக்கு செல்ல முடியாது என்பதால் யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் தற்போது ஆந்திர தெலுங்கானா அரசு பொதுமக்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
 
அதாவது, ரூ.500 கொடுத்து முன்பதிவு செய்யவேண்டும். அப்படி செய்தால் ஒருநாள் உங்களை அழைப்பார்கள. அன்று நீங்கள் சிறைக்குள் சென்று, அங்கிருக்கும் கைதிகளில் ஒருவராக இருந்து விட்டு வரலாம். அவர்களின் ஒரு நாள் வாழ்க்கையை நீங்களும் அருகில் இருந்து பார்த்து விட்டு வரலாம்.