வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 29 மே 2017 (05:54 IST)

தங்களுக்கு தாங்களே ஆப்பு வைத்து கொண்ட ஐடி ஊழியர்கள்

ஒரு காலத்தில் ஐடி ஊழியர்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டு வலம் வந்தவர்கள் இன்று பரிதாபமான நிலையில் உள்ளனர். இந்திய ஐடி நிறுவனங்கள் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்களை வெளியேற்றும் முடிவை எடுத்துள்ளதால் ஐடி ஊழியர்கள் கடும் பாதிப்பில் உள்ளனர்.



லட்சக்கணக்கில் சம்பளம் என்றவுடன் வீக் எண்டில் பார்ட்டி, தவணை முறையில் அபார்ட்மெண்ட் வீடு, கார், உள்பட சொகுசு வாழ்க்கைக்கு பழகிவிட்ட ஐடி ஊழியர்கள் தற்போது திடீரென வேலை பறிபோவதால் நட்டாற்றில் விடப்பட்டது போன்ற நிலையில் உள்ளனர்.\

முதல்கட்டமாக ஐடி ஊழியர்களுக்கு இந்த நிலை ஏற்பட காரணம் அவர்களது கண்டுபிடிப்புதான். ஆட்டோமேஷன் என்ற முறையை ஐடி ஊழியர்கள் தான் கண்டுபிடித்தனர். ஆனால் அவர்களது கண்டுபிடிப்பே இப்போது அவர்களுக்க் ஆப்பு வைத்துள்ளது. ஆட்டோமேஷன் மூலமாக ஐடி சேவையின் அடிமட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் நிலையில், இதுசார்ந்த பிரிவில் இருக்கும் ஊழியர்கள் அனைவருமே, தேவையற்றவர்களாக கருதப்படுகின்றனர்,.

அதுமட்டுமின்றி பல இந்திய ஐடி ஊழியர்கள் லேட்டஸ்ட் டெக்னாலஜியில் அப்டேட் இல்லை. இன்னும் பழைய முறையிலேயே கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்து வருவதாகவும், பணிச்சுமை, குடும்ப சுமை, மன அழுத்தம் காரணமாக அவர்களால் அப்டேட் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.