வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (13:15 IST)

வானிலிருந்து செயற்கைக்கோள் எடுத்த முதல் படம்! – இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!

Sattelite pic
இஸ்ரோ சமீபத்தில் விண்ணில் ஏவிய வானிலை செயற்கைக்கோள் தனது முதல் படத்தை பூமிக்கு அனுப்பியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 26ம் தேதி பிஎஸ்எல்வி சி54 ராக்கெட்ட வானில் ஏவியது. இந்த ராக்கெட்டில் முதன்மை செயற்கை கோளாக ஓசோன் சாட் 03 என்ற வானிலை ஆய்வுக்கான செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

அதோடு இந்தியாவின் ஐஎன்எல் 2பி, பிக்சல் இந்தியாவின் ஆனந்த் செயற்கைக்கோள் உள்பட வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களையும் சேர்ந்து 9 செயற்கைக்கோள்கள் வானில் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன.

ஓசோன்சாட் 03 செயற்கைக்கோள் மூலம் கடல் மேல்பரப்பு வெப்பநிலை, காற்று வீசும் திசை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறி வானிலை தொடர்பான தகவலை பெற முடியும். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஓசோன்சாட் தற்போது வானிலிருந்து இந்தியாவை எடுத்த தனது முதல் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.

புகைப்படத்தில் குஜராத் மற்றும் அரபிக்கடல் ஆகியவை சென்சார்களால் படம் பிடிக்கப்பட்டுள்ளது, இந்த படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Edit By Prasanth.K