நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கு அடியில் தண்ணீர்... உறுதி செய்தது சந்திரயான்-3..!
நிலவின் துருவப் பகுதிகளில் தரைக்கடியில் தண்ணீர் இருப்பதை இஸ்ரோ உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
நிலவை ஆராய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -3 தரவுகளை ஐஐடி கான்பூர், யூனிவர்சிட்டி ஆஃப் சதன் கலிபோர்னியா ஆகிய பல்கலைக்கழகமுடன் இணைந்து ஆராய்ச்சி செய்த நிலையில் அதில் நிலவின் துருவ பகுதிகளில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் அந்த தண்ணீர் ஐந்து முதல் எட்டு மீட்டர் ஆழத்தில் பனி கட்டிகளாக உறைந்து இருப்பதையும் இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
நிலவின் துருவ பகுதியில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அடுத்த கட்டமாக சந்திரயான்- 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப்பகுதியை துளையிட்டு ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும், இதில் நிலவில் தண்ணீர் இருப்பதை 100% உறுதி செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே நிலவில் மனிதர்கள் வாழ்வதற்கான ஆய்வு செய்து கொண்டிருக்கும் நிலையில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டால் இன்னும் சில ஆண்டுகளில் நிலவில் மனிதர்கள் குடியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva