வெள்ளி, 14 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 25 ஜூலை 2016 (10:19 IST)

லிஃப்ட் தருவதாக கூறி வெளிநாட்டு பெண் கூட்டு பலாத்காரம்

இமாச்சல பிரதேச மாநிலத்தில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 25 வயதான பெண் ஒருவருக்கு லிஃப்ட் தருவதாக கூறி அவரை காரில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
மனாலி அருகே நள்ளிரவு 3 மணியளவில் அருகில் உள்ள ஸ்பிட்டி வேலி பகுதிக்கு செல்ல டாக்ஸியை தேடிக்கொண்டு இருந்தார் அந்த வெளிநாட்டு பெண். அப்போது அந்த பகுதியில் நம்பர் பிளேட் இல்லாமல் வந்த கார் அவருக்கு லிஃப்ட் தருவதாக கூறி அழைத்துள்ளனர்.
 
அந்த காரில் 6 பேர் இருந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் அந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காலை 10 மணி அளவில் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
 
மனாலி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் 3 வெளிநாட்டு பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளது.