வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 5 மே 2017 (06:39 IST)

இரும்புப்பெண் இரோம் சர்மிளாவுக்கு திருமணம்! விரைவில் காதலரை கைப்பிடிக்கின்றார்

மணிப்பூரில் ஆயுத சட்டத்தை நீக்க வலியுறுத்தி தொடர்ந்து 17 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இரும்புப்பெண் இரோம் சர்மிளா, சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் இழந்தார். வெறும் 90 ஓட்டுக்களே பெற்ற இவர் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.



 


இந்த நிலையில் அவர் தனது நீண்டநாள் காதலரான இங்கிலாந்தின் டெஸ்மேண்ட் கவுடின்கோ என்பவரை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அவர் விரைவில் இங்கிலாந்து செல்லவுள்ளதாகவும், இவர்களது திருமணம் இங்கிலாந்தில் அல்லது கேரளாவில் வெகுவிரைவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.