6 வருடங்களை பூர்த்தி செய்த இந்தியாவின் முதல் தனியார் ரயில்.. கட்டணம் அதிகமாக இருந்தாலும் வரவேற்பு..!
இந்திய ரயில்வேயின் முதல் தனியார்மயமாக்கப்பட்ட ரயில் சேவையான 'தேஜாஸ் விரைவு ரயில்', 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி (IRCTC)-யால் இயக்கப்படுகிறது. புது டெல்லிக்கும் லக்னௌவுக்கும் இடையே இயக்கப்படும் இந்த ரயில், தற்போது 6 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
சேவையை தொடங்கிய முதல் மாதத்திலேயே ரூ. 7.73 லட்சம் வருவாய் ஈட்டி தேஜாஸ் சாதனை படைத்தது.
இந்த ரயிலின் கட்டணம், சதாப்தி மற்றும் வந்தே பாரத் போன்ற பிற ரயில்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. புது டெல்லி - லக்னௌ வழித்தடத்தில், தேஜாஸ் ரயிலின் ஏசி இருக்கை வசதிக்கு ரூ. 1,679-ம், எக்ஸிக்யூட்டிவ் இருக்கை வசதிக்கு ரூ. 2,457-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதிகக் கட்டணம் இருந்தபோதிலும், அதன் தரமான சேவைக்காக தேஜாஸ் ரயில் பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Edited by Mahendran