செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth K
Last Modified: ஞாயிறு, 21 செப்டம்பர் 2025 (08:08 IST)

ரயில் நிலைய குடிநீர் பாட்டில்கள் விலை குறைப்பு! சில்லறைக்குதான் திண்டாட்டம்?

Rail Neer

ரயில்வேயில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் விலையை குறைத்து ரயில்வே வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ’ரயில் நீர் (Rail Neer)’ என்ற ஐஆர்சிடிசியின் குறைந்த விலை தண்ணீர் பாட்டில்கள் விற்கப்பட்டு வருகின்றன. மற்ற நிறுவன தண்ணீர் பாட்டில்கள் 1 லிட்டர் ரூ.20க்கும் மேல் விற்பனையாகி வரும் நிலையில் ரயில் நீர் 1 லிட்டர் ரூ.15க்கும், அரை லிட்டர் ரூ.10க்கும் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.

 

தற்போது நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரிகள் குறைக்கப்பட்டுள்ளதால் ரயில் நீர் விலையும் குறைக்கப்படுகிறது. அதன்படி இனி 1 லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.14 ரூபாய்க்கும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.9  ரூபாய்க்கு விற்க வேண்டும் என ரயில்வே வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது பயணிகள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் இதனால் சில்லறை அதிகமாக கொடுக்க வேண்டியது இருக்கும் என்பது பயணிகளையும், கடை வைத்திருப்பவர்களையும் சிரமத்திற்கு ஆளாக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

 

Edit by Prasanth.K