ஜூன் மாதத்தை தாண்டி போகும் ஊரடங்கு? விமான சேவை ரத்து!
ஜூலை 15 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்கள் ரத்து என விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தடுக்க அரசு துரிதமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில், தற்போது, இந்தியா முழுவதும் நகரங்களில் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்ற மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், இந்தியா முழுவதும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் ஆகியவற்றின் சேவைகளும் வரும் ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி வரை ரத்து என அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது இந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என விமான போக்குவரத்து அமைச்சகம் சற்றுமுன் அறிவித்துள்ளது.