இந்தியாவில் தாக்குதல் நடக்காது என உறுதி அளிப்பீர்களா? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கேள்வி!

Last Updated: வெள்ளி, 26 ஜூன் 2020 (16:32 IST)

அடுத்த ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டில் நடக்கும் உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி விளையாடுவது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.

2021 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்கள் இந்தியாவில் நடக்க உள்ளன. இதில் பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா கிடைப்பதில் சிக்கல் இருக்காது என ஐசிசி உறுதியளிக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, பிசிசிஐ நிர்வாகி ‘பாகிஸ்தான், இந்தியாவில் எல்லை தாண்டி ஊடுருவல் மற்றும் புல்வாமா போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாது என்றோ பாகிஸ்தான் அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான உறுதியளிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுத்தருமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :