வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj`
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (19:14 IST)

அதிகமாக செல்போன் பயன்படுத்தும் இந்தியர்கள்….

இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் உள்ள மனிதர்கள் அதி நவீன தொழில்நுட்பத்திற்கு தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டுள்ளனர்.

அதில், மக்கள் அதிமுக்கியமாக பயன்படுத்திவரும் செல்போன் என்பது தேவைக்கு என்பதற்குப் பதிலாக  வாழ்க்கையின் அத்தியாசியாவசியமாகவே மாறிவிட்டது.

இதில், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும்  முதியவர் யாருமே இதற்கு வேறுபாடில்லை. எல்லோரும் இன்று செல்போன் இல்லாமல் இருப்பதில்லை.

அந்தவகையில் ஒரு ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியர்கள்தான் அதிகளவில் செல்போன் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கின்றன.

அதிலும்,உலகிலேயே இந்தியர்கள்தான் அதிகளவில் செல்போனில் நேரத்தைச் செலவிடுபவர்கள் என நோக்கியா நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்கள் சுமார் 5 மணிநேரம் செல்போனில் நேரத்தைச் செலவிடுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது