புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 ஏப்ரல் 2020 (13:34 IST)

மருந்துகள், முக கவசங்களை வீட்டிலிருந்தே பெறலாம்! - அஞ்சல் துறையின் புதிய செயலி!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் முக கவசங்களை அஞ்சல் துறையின் மூலமாக பெற இந்திய தபால் துறை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. மே 3 ல் இந்த ஊரடங்கு முடியும் நிலையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஊரடங்கினால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள் மருத்துவ பொருட்களை வாங்க அஞ்சல் துறை தனது செயலியில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

“போஸ்ட் இன்ஃபோ” எனப்படும் இந்த செயலி கூகிள் ப்ளேஸ்டோரில் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம். அதில் சில விவரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொண்டால் ஆர்டர் செய்யப்படும் மருந்துகள் மற்றும் முக கவசங்களை தபால் ஊழியர்கள் வீடுகளிலேயே டெலிவரி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.