ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்க பதக்கம்: ஆய்வு அறிக்கையில் தகவல்


Abimukatheesh| Last Updated: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (18:49 IST)
இந்தியா ஒரு தங்கம் உள்பட 8 பதக்கம் வெல்லும் என்று ‘கோல்டு சாச்’ என்ற நிதி நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

 
பிரேசிலில் நாளை தொடங்கவுள்ள 31வது ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த 118 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
 
இந்தியா சார்பில் 15 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் களமிரங்க உள்ளனர். கட்ந்த ஒலிம்பிக் போட்டிகலை விட இந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக வீரர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.
 
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு பதக்கம் வெல்லும் என்று ‘கோல்டு சாச்’ என்ற நிதி நிறுவனம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதில் இந்தியா ஒரு தங்கம் உள்பட 8 பதக்கம் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :