செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (09:14 IST)

ரொம்ப நாளைக்கு இதை பொறுத்து கொள்ள முடியாது! – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறிய தாக்குதல்களில் ஈடுபடுவதை இந்தியா கண்டித்துள்ளதுடன், விளக்கம் கேட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கிருஷ்ண காடி பகுதியில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலால் ஒரு குழந்தை உட்பட மூன்று இந்தியர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் அடிக்கடி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறி பொதுமக்களை தாக்குவதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. பாகிஸ்தான் படைகள் இதுவரை 2,711 முறை இதுபோன்ற அத்துமீறலில் ஈடுபட்டுள்ளன. இதனால் 21 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தங்களை பாகிஸ்தான் மீறுவது கண்டிக்கத்தக்கது”என்று தெரிவித்துள்ளதுடன், இதுகுறித்து விளக்கம் கேட்டு பாகிஸ்தான் தூதரகத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.