மக்கள் பசியால் வாடும் நாடுகளில் இந்தியாவிற்கு முதலிடம்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 29 மே 2015 (21:24 IST)
உலகிலேயே அதிகமான மக்கள் பசியால் வாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
 
 
இது குறித்து ஐ.நா.விற்கான உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில், இந்தியாவில் வசிக்கும் மக்களில் 194.6 மில்லியன் பேர் உணவுப் பற்றாக்குறையால் வாடுவதாகவும், உலகளவில் இதுவே அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது மொத்த இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதமாகும். மேலும் அந்த அறிக்கை, “வளரும் நாடுகளில் கிராமப் புறங்களில் வசிக்கும் மக்கள்தான் அதிக அளவிலான பசியாலும், உணவுப் பற்றாக்குறையால் வாடுகின்றனர். கிராமப்புற பகுதியையும், விவசாய வளர்ச்சியையும் ஊக்குவித்தால் மட்டுமே ஒட்டுமொத்தமான வளர்ச்சியை அடைய முடியும்” என்றும் தெரிவித்துள்ளது.
 
உலகம் முழுவதிலும் 795 மில்லியன் அதாவது ஒன்பதில் ஒரு பங்கு மக்கள் உணவு பற்றாக்குறையில் வாழ்வதாகவும், இதில் 62 சதவீதத்தினர் ஆசியா மற்றும் பசபிக் பகுதிகளில் வாழும் மக்கள் என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :