இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது...
1.5.டன் எடைகொண்ட இந்த ராக்கெட், 400 கோடி ரூபாய் செலவிலான திட்டமாகும். இது செயற்கைக்கோளாக விண்வெளி சுற்றுப்பாதையில் நிறுத்தப்படும்.
ஒவ்வொரு கட்டமாக சென்று கொண்டிருந்த ஜிஎஸ்.எல்.வி. வெற்றிகரமாக பாய்ந்தது. ஜிசாட் மார்க் 29 . முதலில் திரவப்பொருள் எரித்த பின்பு திட பொருளை ஹைட்ரஜனை எரித்து விட்டு விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது.
இரண்டாம் விஷன்
இது இந்திய மண்ணின் தயாரான இந்த விண்களம் என்பது குறிப்பிடத்தக்கது. மிக அதிக எடையுள்ள செயற்கை கோளை விண்ணில் ஏவி மிக சீறப்பான சாதனை படைத்துள்ள இஸ்ரோவின் முக்கியமான மைல்கல் சாதனையாகும்.
திட்டமிட்ட பாதையில் சரியான நேரத்தில் சரியான பாதையில் பிரிந்து அனுப்பப்பட்டது. விண்ணில் சரியான சுற்று வட்டப் பாதையில் ஜி .எஸ்.எல்.வி ராக்கெட்டிலிருந்து ஜிசாட் 29 செயற்கைக்கோள் தனியாகப் பிரிந்தது.
குழுவின் முயற்சியால் இந்த வெற்றி சாத்தியமானது :
ஜிசாட் 29 மற்றூம், ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் திட்டத்தில் செயலாற்றிய அனைவருக்கும் நன்றி என்று இஸ்ரோ தலைவர் சிவன் உரையாற்றும் போது கூறினார்.
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சதீஸ் தவான் ஏவுகளத்தில் இருந்து இன்று விண்ணில் ஏவப்பட்ட இந்த விண்களமானது, உள்நாட்டிலேயே தயாரான மிக அதிக எடைகொண்ட செயற்கைக்கோள் ஆகும்.
இதனால் ஒட்டுமொத்த இந்தியர்களும் பெருமிதம் கொள்ளும் தருணமாகும். ஜிசாட் 29 ,மூலமாக கிராமங்களில் தகவல் தொடர்பு வசதியுடன் உயர்வேக இணையதள வசதியையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.