1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 9 ஜூலை 2015 (20:14 IST)

எல்லையை பாதுகாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது: பாகிஸ்தான் மிரட்டலுக்கு மனோகர் பாரிக்கர் பதிலடி

பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் எல்லைகளை பாதுகாக்கும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறியுள்ளார்.
 

 
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.
 
லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் இது பற்றி கேள்வி கேட்ட போது எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இந்திய ராணுவத்திடம் உள்ளது என்று தெரிவித்தார்.
 
மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான லக்வியை விடுவித்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுப்பதை ஐநா சபையில் சீனா தடுப்பது பற்றி கேட்டதற்கு நேரடியாக பதில் அளிக்க மனோகர் பாரிக்கர் மறுத்துவிட்டார்.
 
மேலும், எல்லைப் பகுதியில் ஊடுருவல் குறைந்து விட்டதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். மியான்மரில் நடந்தது போன்ற அதிரடி தாக்குதல்கள் மீண்டும் நடக்குமா என்ற கேள்விக்கு ரகசியங்களை வெளியிட இயலாது என்று அவர் கூறினார்.