ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 29 செப்டம்பர் 2016 (15:30 IST)

இந்தியா-பாகிஸ்தான் போர் சூழல்: அவசரமாக கூடுகிறது அனைத்து கட்சிகள் கூட்டம்!

இந்தியா-பாகிஸ்தான் போர் சூழல்: அவசரமாக கூடுகிறது அனைத்து கட்சிகள் கூட்டம்!

உரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து நேற்று இரவு தீவிரவாத முகாம்கள் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் உயிரழப்புகள் அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


 
 
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மக்களை பாதுகாக்க நாங்கள் பதில் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என கூறியுள்ளார்.
 
மேலும் இந்திய ராணுவம் அத்துமீறி பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்தியது தீவிரவாதிகள் மீது அல்ல, பாகிஸ்தான் ராணுவத்தை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தப்பட்டது என கூறியுள்ளார் நவாஸ் ஷெரீப்.
 
இந்தியாவின் தாக்குதலும், பதிலுக்கு நாங்களும் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமரின் பேச்சும் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இன்று காலை பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.