செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 23 ஆகஸ்ட் 2020 (13:42 IST)

வாங்கிய ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்த திட்டம்?

சமீபத்தில் இந்தியா வந்த ரபேல் விமானத்தை லடாக் எல்லையில் நிறுத்த இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல். 
 
இந்தியா - சீனா மோதல் காரணமாக லடாக் எல்லையில் ரபேல் விமானங்களை நிறுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங் முப்படை தலைவர், முப்படை தளபதி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். 
 
அதாவது சீனா தனது படைகளை திரும்ப பெறாததால் அதிருப்தியில் உள்ள இந்தியா, ரபேலை எல்லையில் நிறுத்த திட்டமிட்டு வருவதாக தெரிகிறது.