1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : புதன், 31 ஆகஸ்ட் 2016 (18:09 IST)

உங்களுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதா? பின் இதைப் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள்!

லிங்கா படத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா.


 


இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், அவருக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைக்க வேண்டும் என்பது குறித்து கூறினார். அப்போது கூறியதாவது, “என்னை எப்போதும் சிரிக் வைத்துக்கொண்டே இருக்கும் வகையில் நகைச்சுவை உணர்வு கொண்ட ஒருதரை தான் நான் திருமணம் செய்துக்கொள்ள தேடிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், சில காமெடி நடிகர்களின் புகைப்படத்தை அனுப்பி இவர் ஓ.கே.வா என அவரை கிண்டல் செய்து வருகின்றனர். தற்போது, சோனாக்ஷி சின்ஹா, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அகிரா என்ற ஹிந்தி படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.