1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 8 ஜூலை 2015 (18:22 IST)

இந்தியாவுடன் போர் மூண்டால் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் - பாக். ராணுவ அமைச்சர்

இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதங்களை பயன்படுத்தும்” என்று பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கூறியுள்ளார்.
 

 
காஷ்மீர் எல்லை விவகாரம் குறித்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதனால், இரு நாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவத்தினர் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் வருகிற 10ஆம் தேதி ரஷ்யாவின் உபா நகரில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். 
 
இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் ஹவாஜா முகமது ஆசிஃப், ‘‘எங்களிடம் உள்ள அணு ஆயுதங்கள் வெறுமனே பார்வைக்காக மட்டும் வைக்கப்படவில்லை. அவற்றை எந்நேரமும் பயன்படுத்தவே வைத்திருக்கிறோம். தற்போது இந்தியாவுடன் எவ்வித போர் அபாயமும் இல்லை.
 
அணு ஆயுதங்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இந்தியாவுடன் போர் நீளக்கூடாது என பிரார்த்தனை செய்கிறோம். ஒருவேளை போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் ராணுவம் அணு ஆயுதங்களை பயன்படுத்தும்” என்று கூறியுள்ளார்.