1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (17:19 IST)

சன்னி லியோன் போல் எல்லா பெண்களும் ஆண்களை மகிழ்விக்க வேண்டும்: ராம்கோபால் வர்மா

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எல்லா பெண்களும் சன்னி லியோன் போல் ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா சர்ச்சையான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 

 
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் அனைவரும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலும் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அதில்,


 

 
சன்னி லியோன் போல் எல்லா பெண்களும், ஆண்களை மகிழ்விக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இவருடைய இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ளனர். உங்கள் அம்மாவும், தங்கையும் ஒரு பெந்தான் என்பதை மறந்துவிட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.