தள்ளிப்போகிறதா எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டம்..? என்ன காரணம்..?
எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A மூன்றாவது கூட்டம் அடுத்த மாதம் மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
பாஜகவை வரும் 2024 தேர்தலில் தோற்கடித்தே தீர வேண்டும் என 36 எதிர் கட்சிகள் ஒன்றிணைந்து I.N.D.I.A என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நடந்த நிலையில் இரண்டாவது கூட்டம் கர்நாடக மாநில தலைநகரம் பெங்களூரில் நடந்தது
இந்த நிலையில் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த கூட்டம் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி போக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கும் முக்கிய தலைவர்கள் அடுத்த மாதம் பங்கேற்க முடியாத சூழல் நிலவுவதால் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்றும் சரியான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
Edited by Siva