1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 18 நவம்பர் 2019 (20:51 IST)

டீ கேட்ட கணவன், மறுத்த மனைவி, ஏற்பட்ட விபரீதம்

கணவன் டீ கேட்டபோது, போட முடியாது என்று மனைவி மறுத்ததால் ஐதராபாத் அருகே பெரும் விபரீதம் ஏற்பட்டுள்ளது
 
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள ஜகத்கிரி என்ற பகுதியில் அதித்வைதா என்ற 37 வயது நபருக்கு ஜோதி என்ற மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. அதித்வைதா அருகில் உள்ள ஒரு கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகிறார். 
 
இந்த நிலைய்ல் நேற்று மாலை அதித்வைதா வேலை முடிந்து களைப்புடன் வீடு திரும்பினார். களைப்பு தீர ஒரு டீ குடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றியதை அடுத்து மனைவி ஜோதியிடம் டீ போட்டு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ஜோதியோ வேறு வேலையில் பிசியாக இருந்ததால் டீ எல்லாம் போட்டு கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்
 
தனது மனைவி தனக்காக ஒரு டீ கூட போட்டுத்தரவில்லையே என்ற கோபத்தில் திடீரென எழுந்த அதித்வைதா, உடனே தான் வேலை செய்யும் கல்குவாரிக்கு சென்று உயரத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டார் ஒரே ஒரு டீயால் தனது கணவன் உயிர் பரிதாபமாக போனதை அறிந்து அவரது மனைவி ஜோதி கதறி அழுத காட்சி காண்போரை கண்ணீரை வரவழைத்தது. இரண்டு வயது குழந்தையை வைத்து கொண்டு கணவர் இல்லாமல் எப்படி வாழ்வேன் என்று அவர் கதறி அழுதது பெரும் சோகமாக இருந்தது