1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2017 (20:39 IST)

கேட்டதை கொடுக்க மறுத்த மனைவி; கொலை செய்த கணவன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் டீ கொடுக்க மறுத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உத்தரகாண்ட் மாநிலம், கொட்வார் அருகே கஷிராம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கீத் சிங்நேகி எனபவர் கடந்த சில நாட்களுக்கு முன் காலியில் எழுந்தவுடன் மனைவி டீ கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 
 
இதில் அத்திரமடைந்த சங்கீத் மனைவியை கத்திரிகோலை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அவரது மரணமடைந்தார். இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர். 
 
காவல்துறையினர் சங்கீத் மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பியோட முயன்ற சங்கீத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.