1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (20:28 IST)

வரதட்சணை பிரச்சனையில் மனைவியின் மூக்கை கத்தியால் அறுத்த கணவர்

வரதட்சணை பிரச்சினை காரணமாக மனைவியின் மூக்கை வெட்டிய கணவரையும், அதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
 

 
உத்திரபிரதேச மாநிலம் ஷாக்ஜாகான்பூரை சேர்ந்த சஞ்சீவ் ரத்தோர் என்பவரது மனைவி கம்லேஷ் ரத்தோர் (25). இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார் சஞ்சீவ்.
 
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சமையல் செய்து கொண்டிருந்த மனைவியிடம் வரதட்சணை பிரச்சினை காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கத்தியை எடுத்து மனைவி கம்லேஷ் ரத்தோரின் மனைவியின் மூக்கை அறுத்துள்ளார்.
 
அருகிலிருந்த சஞ்சீவின் தாயாரும் கம்லேஷ் நகர்ந்து விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொள்ள, சஞ்சீவ் அவரது மூக்கை நறுக்கியுள்ளார்.
 
பின்னர் அங்கிருந்து சஞ்சீவ் தனது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனையடுத்து கம்லேசை அவருடைய பெற்றோர்கள் வெட்டப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர், ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கை ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், தலைமறைவாக உள்ள சஞ்சீவ் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர்.