1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 15 ஜனவரி 2017 (12:20 IST)

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை: 6 ஆண்டுகளாக தொடர் பலாத்காரம்!

பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை: 6 ஆண்டுகளாக தொடர் பலாத்காரம்!

புனேவில் ஒருவர் தான் பெற்ற மகளையே கடந்த 6 வருடங்களாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதில் 12 வயதான அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த விவகாரம் வெளியே தெரிய வர அந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளார்.


 
 
புனே காலேவாடி பகுதியை சேர்ந்த அந்த கொடூர தந்தை தனது 12 வயது மகளை கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அந்த சிறுமி வயதுக்கு வந்துள்ளார்.
 
சிறுமி வயதுக்கு வந்த பின்னரும் தொடர்ந்து அந்த கொடூர தந்தை சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த சம்பவம் சிறுமியின் தாய்க்கு தெரிய வந்த பின்னரும் அவர் மௌனமாகவே இருந்துள்ளார்.
 
இதனால் மனம் வெறுத்துப்போன அந்த சிறுமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் வெளியுலகத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.