வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜனவரி 2018 (00:54 IST)

சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளியது மும்பை! எதில் தெரியுமா?

உலகிலேயே அதிக வாடகை கிடைக்கும் முதல் பத்து இடங்கள் குறித்த சர்வே ஒன்றை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து அதன் முடிவை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது இந்த சர்வேயில் சிங்கபூரை பின்னுக்கு தள்ளி உலகில் அதிக வாடகை வசூலிக்கும் நகரங்களில் 5வது இடத்தை மும்பை பெற்றுள்ளது.

உலகில் அதிகளவு வாடகை கிடைக்கும் நகரங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது ஹாங்காங். இதனையடுத்து டோக்கியோ, ஷாங்காய், சியோல் ஆகியவை 2 முதல் 4வது இடங்களை பிடித்துள்ளது.

இந்த பட்டியலில் பீஜிங் 6வது இடத்தையும் யோகோஹாமா 7வது இடத்தையும் சிங்கப்பூர் 8வது இடத்தையும் ஒசாகா 9வது இடத்தையும் மெட்ரோ மணிலா 10வது இடத்தையும் பிடித்துள்ளன.