1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Hero bjp become zero says mamtha banerji

ஹீரோ பாஜகவை ஜீரோவாக்க வேண்டும்: மம்தா பானர்ஜி

பாஜக
தற்போது ஹீரோவாக இருக்கும் பாஜகவை ஜீரோவாக வேண்டும் என மேற்குவங்க மாநில முதலமைச்சர்  மம்தா பானர்ஜி பேசியுள்ளார். 
 
கொல்கத்தாவில் இன்று முதல் மேற்குவங்க மாநில முதல்வர்  மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்வை  சந்தித்தார் 
 
அதன்பின் செய்தியாளர்களிடம்  மம்தா பானர்ஜி பேசியபோது பாஜக தற்போது ஹீரோவாக இருந்தாலும் அந்த கட்சியை ஜீரோ ஆkக வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் ஊடகங்களின் ஆதரவு மற்றும் பொய்களால் தான் பாஜக ஹீரோவாக உருவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
காங்கிரஸ் உட்பட அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைக்க தான் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் மற்ற கட்சி தலைவர்களின் தான் சந்திக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ஆந்திர முதல்வரின் சகோதரியை கைது செய்த தெலுங்கானா காவல்துறை!