1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 4 ஆகஸ்ட் 2021 (07:19 IST)

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் முதல் அலை, இரண்டாவது அலை, முடிந்து தற்போது ஒரு சில நாடுகளில் மூன்றாவது அலை, தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தநிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இருதய நோய் அதிகமாக வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து இது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 லட்சம் பேர்களிடம் ஆய்வு செய்ததில் அவர்களில் 86 ஆயிரம் பேர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் பாதித்து இருந்தது என்பது தெரிய வந்துள்ளது 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருதய சிக்கல்கள் இருக்கும் காரணத்தினால் அவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது 
 
மேலும் கொரோனா எதிரான தடுப்பூசி செலுத்துவதும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது