செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (09:49 IST)

போலி டாக்டர் மாறி போலி சிஎம்; ஜெகனை இப்படியும் டிரெண்டாக்கும் மக்கள்!

சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBDFakeCM என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
 
ஆந்திராவில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அங்கு முதலமைச்சராக உள்ளார். அவருக்கு கோயில் கட்டுமளவு அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது.
 
ஜெகன் முதல்வராக இல்லாமல் ஆந்திர மக்களின் குடும்பங்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். எனவே, அவர் என்ன செய்தாலும் அது வியக்கதக்க வகையில் பாரட்டை பெறுகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜெகன் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகிறது. இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் பலரை அவரி வாழ்த்திவருகின்றனர். 
 
அதே சமயம் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #HBDFakeCM என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கப்பட்டு அவர் செய்த தவறுகளை பதிவிட்டு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.