50 நிமிடங்களில் 3 பரோட்டா சாப்பிட்டால்.. லைப்டைம் ஃப்ரீ
ஹரியானா மாநிலத்தில் புகழ்பெற்ற ஓட்டல் ஒன்றில் 50 நிமிடத்தில் 3 பரோட்டா சாப்பிடால், வாழ்நாள் முழுவதும் பரோட்டா இலவசமாக வழங்கப்படும் போட்டியை நடத்தி வருகின்றனர்.
வெண்ணிலா கபடி குழு படத்தை தொடர்ந்து ஆங்காங்கே பரோட்டோ சாப்பிடும் போட்டி நடைப்பெற்று வருகிறது. ஆனால் பரோட்டா சாப்பிடும் போட்டி நடத்தும் புகழ்பெற்ற ஓட்டல் ஒன்று இருகிறது. இந்த ஓட்டல் ஹரியானா மாநிலத்தில் உள்ளது.
50 நிமிடத்தில் 3 பரோட்டா சாப்பிட வேண்டும், இந்த போட்டியில் வெற்றிப் பெறுபவர்களுக்கு வாழ்நால் முழுவதும் பரோட்டா இலவசமாக வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைந்து விடுகின்றனர்.
ஒரு பரோட்டாவின் சராசரி அளவு 24 இன்ச். இந்த போட்டியில் அஸ்வினி குமார், மகாராஜா ஆகியோர் வெற்றிப்பெற்றுள்ளனர். இதுவரை இந்த இருவர் மட்டும்தான் வெற்றிப்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.