வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (16:55 IST)

ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல்.. யாருக்கு வெற்றி? தேர்தல் களம் குறித்த தகவல்..!

ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீர் தேர்தல் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் களம் தயாராகி வருவதாகவும் தேர்தல் களத்தில் பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் சுறுசுறுப்பாக இயங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

90 தொகுதிகளை கொண்ட ஹரியானா மாநிலத்தில் 47 தொகுதிகளில் வென்று பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தது. ஆனால் 2019 ஆம் ஆண்டு பெரும்பான்மை கிடைக்க விட்டாலும் 40 தொகுதிகளை வென்ற பாஜக மாநில கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது.

இந்த நிலையில் பாஜக ஆட்சி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அங்கு வாக்கு வங்கி அந்த கட்சிக்கு   11% சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இப்போதைய நிலவரப்படி ஹரியானாவில் காங்கிரஸ் கை ஓங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காஷ்மீர் மாநிலத்தை பொருத்தவரை சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில் நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால் இந்த இரு யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் முடிவை கணிக்க முடியாத அளவில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரை பொருத்தவரை இந்துக்கள் பெரும்பான்மை வாழும் ஜம்மு பகுதியில் பாஜகவுக்கு ஆதரவு அதிகமாக இருக்கிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் எதிர் கட்சிகளும் நல்ல வலுவான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்றும் ஜம்மு காஷ்மீரை பொருத்தவரை இன்னும் சில வாரங்கள் கழித்தே தேர்தல் முடிவை கணிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Mahendran