செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (15:43 IST)

கற்பழிப்பு குற்றவாளிகளை அவர்களே சுட்டுக்கொல்லட்டும்: ஆம் ஆத்மி மந்திரி

கற்பழிப்பு குற்றவாளிகளை அவர்களே சுட்டுக்கொல்லட்டும்: ஆம் ஆத்மி மந்திரி

சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் ஆயுத பயிற்சி அளித்து ஆயுதங்களை கொடுங்கள். கற்பழிக்க முயற்சிப்பவர்களையும், கற்பழித்தவர்களையும் அவர்களே சுட்டுக் கொல்லட்டும், என்று ஆம் ஆத்மி மந்திரி கபில் மிஸ்ரா தனது வலைப்பக்கத்தில் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்துள்ளார்.


 

 
உத்திரபிரதேச மாநிலத்தில் தொடர்ந்து நடைப்பெறும் பாலியல் குற்றங்கள் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக டெல்லி கலாசாரத்துறை மந்திரி கபில் மிஸ்ரா, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு எதிராக தனது வலைப்பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
 
உத்திரபிரதேச மாநிலத்தில் நடைப்பெற்ற கூட்டு பலாத்கார சம்பவம் யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். டெல்லியில் 450 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 
 
நான் மரண தண்டனைக்கு எதிராக நீண்ட காலமாக குரல் கொடுத்து வருபவன். ஆனால் பாலாத்காரம் செய்யும் குற்றவாளிகளை கடுமையாக கொல்லும் வகையில் பாராளமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும்.
 
சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் ஆயுத பயிற்சி அளித்து ஆயுதங்களை கொடுங்கள். கற்பழிக்க முயற்சிப்பவர்களையும், கற்பழித்தவர்களையும் அவர்களே சுட்டுக் கொல்லட்டும்.
 
இவ்வாறு கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.