1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2023 (13:21 IST)

இந்தியாவில் மிக வேகமாக பரவும் இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!

virus
இந்தியாவில் மிக வேகமாக பரவும் இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ்.. நிபுணர்கள் எச்சரிக்கை..!
இந்தியாவில் கடந்து சில நாட்களாக இன்புளூயன்சா எச்3என்2 என்ற வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது.  இதனால் இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
இதுகுறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும் இந்த வகை காய்ச்சலுக்கு பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில் இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆன்ட்டிபயாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது 
 
இந்த காய்ச்சல் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும் என்றும் மூன்று நாட்களில் காய்ச்சல் போய்விடும் என்றும் ஆனால் இருமல் மூன்று வாரங்கள் வரை இருக்கும் என்றும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
மேலும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு டாக்டர்களுக்கு கூறிய அறிவுரையில் இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை கொடுக்க வேண்டாம் என்றும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து போவதுடன் உண்மையான தேவையாக இருக்கும்போது எடுத்துக் கொண்டால் பலனாகாமல் போய்விடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
இந்த நிலையில் இது குறித்து முன்னாள் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியபோது, இந்த புதிய வைரஸ் எச்1என்1 வைரசின் மாறுபாடு அடைந்த வைரஸ் என்றும், காய்ச்சல், தொண்டை புண், இருமல், சளி உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் என்று கூறினார். இந்த காய்ச்சலில் இருந்து பாதுகாத்து கொள்ள முகக்கவசம் அணிந்து அடிக்கடி  கைகளை கழுவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran