1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (18:13 IST)

குஜராத் கள்ளச்சாராயம்: பலி எண்ணிக்கை 40ஆக உயர்வு

dead
குஜராத்தில் கள்ள சாராயம் குடித்ததால் நேற்று முன்தினம் 24 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் 50க்கும் மேற்பட்டோரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின
 
இந்த நிலையில் குஜராத் விஷ சாராயத்திற்கு தற்போது பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி 30க்கும் மேற்பட்டோர் இன்னும் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் மொத்த உயிரிழப்பு 40 என்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் விஷ சாராயம் காய்ச்சிய 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது 
 
குஜராத் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளாக மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்று புதூர்.