வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (11:21 IST)

1700 பேரை கொன்று குவித்த புலிகள், யானைகள்!? – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Tiger Elephant
இந்தியாவில் மனிதர்கள் வாழும் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டத்தால் 1700க்கும் அதிகமானோர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களிலும் வனப்பகுதிகள் உள்ள நிலையில், அந்த வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட பல காட்டு விலங்குகளும் வசித்து வருகின்றன. சில சமயங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் இந்த விலங்குகள் நுழைவதும் அதனால் உயிர் பலி ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது.

இவ்வாறான மனித பலிகளுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. முக்கியமாக வனப்பகுதிகளை அழித்தல், நகரமயமாக்கலால் வனப்பகுதிகள் மக்கள் வாழும் பகுதிகளாக மாற்றப்படுவது, யானைகளின் வழித்தடங்களில் வாழ்விடங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வன விலங்குகள் தாக்கி நாடு முழுவதும் 1700க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக இந்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமான மனிதர்கள் இறந்தது புலிகள் மற்றும் யானைகளின் தாக்குதலால் என கூறப்பட்டுள்ளது.

அதுபோல மனிதர்கள் நடத்திய வேட்டைகளால் 230க்கும் அதிகமான யானைகளும், புலிகளும் மடிந்துள்ளன. மனிதன் – விலங்கு நடுவே ஏற்படும் இந்த எதிர்கொள்ளலை சமாளிக்க மத்திய, மாநில வனத்துறைகள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன.