புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 மார்ச் 2020 (13:28 IST)

Yes Bank-ல் ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்! கிளம்பியது அடுத்த சர்ச்சை

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் பேங்க் நிறுவனத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக தனியார் வங்கியான யெஸ் பேங்க் கடுமையான நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி அந்த வங்கியைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதன் ஒரு கட்டமாக யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.
 
யெஸ் பேங்க்கினை நிர்வாகம் செய்ய எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அலுலரான பிரசாந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் யெஸ் பேங்கில் கிட்டதட்ட 1300 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைத்திருந்த திருப்பதி தேவஸ்தானம் கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் அந்த பணத்தை மொத்தமாக எடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இதனைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரத்திற்கு முன்பு குஜராத்தை சேர்ந்த நிறுவனம் ஒன்று யெஸ் பேங்கில் இருந்து ரூ.265 கோடி பணத்தை எடுத்துள்ளது. இதன் மூலம், நிதி நெருக்கடியில் இருந்தும் வங்கி எப்படி அவ்வளவு பெரியத் தொகை கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.