1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 23 டிசம்பர் 2018 (11:11 IST)

ஜிஎஸ்டி எவ்வளவு குறைந்தது? பட்டியல் இதோ...

ஜிஎஸ்டி என்ற ஒற்றை வரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடந்தது. 
 
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் வரி விதிப்பு மாற்றங்களும் பின்வருமாறு, 
1. ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பான ஆண்டாந்திர கணக்குகளை தாக்கல் செய்யும் இறுதி தேதி மார்ச் 31க்கு பதிலாக ஜூலை ஒன்றாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
 
2. 33 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களின் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீதான வரி 5% குறைக்கப்பட்டுள்ளது. 
 
3. வங்கிகளின் அடிப்படை சேமிப்பு கணக்கு மற்றும் பிரதமரின் ஜன்தன் யோஜானா வங்கி கணக்குகளுக்கான வரி முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது.
 
4. அனைத்து மதத்தினருக்கான புனித யாத்திரை மற்றும் பக்தி சுற்றுலாவுக்கான விமான கட்டணத்தின் மீதான வரி 5% குறைக்கப்பட்டுள்ளது.
 
5. 32 அங்குலம் அகலத்திலான கலர் டிவி, கம்ப்யூட்டர் மானிட்டருக்கான வரி 28%-ல் இருந்து 18% சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
 
6. லித்தியம் பேட்டரி பவர்பேங்க், வாகன டயர்கள் மீதான வரியும் 18% குறைக்கப்பட்டுள்ளது. 
 
7. ரூ.100-க்கு அதிகமான சினிமா டிக்கெட் மீதான வரி 18% குறைக்கவும், ரூ.100-க்கு குறைவான சினிமா டிக்கெட் மீதான வரி 12% குறைக்கப்பட்டுள்ளது
 
இந்த புதிய வரி விகிதம் அனைத்தும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.