செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 7 அக்டோபர் 2017 (14:43 IST)

பான் மற்றும் ஆதார் தேவையில்லை; ஜிஎஸ்டி மாற்றங்கள்: முழு விவரம் உள்ளே...

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை கொண்டு வரும் விதமாக கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. 


 
 
ஜிஎஸ்டி வரி விதிப்பால் பல துறைகளில் நெருக்கடி ஏற்பட்டது. இதனை சமாளிக்க ஜிஎஸ்டி வரி விதிப்பில் திருத்தம் கொண்டு வரத்தயாராக இருப்பதாக மோடி அறிவித்தார்.
 
இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 27 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. அதோடு சில திருந்தங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது.
 
# ஏற்றுமதியாளர்களுக்கான ஜிஎஸ்டி வரியில் இருந்து 6 மாதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
# ரூ.1 கோடிக்கு கீழ் வணிகம் புரிபவர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்தால் போதும். 
 
# ரூ 50 ஆயிரத்துக்கும் மேல் நகை வாங்குபவர்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டிய அவசியமில்லை. 
 
# தங்க நகை மற்றும் விலை உயர்ந்த கற்கள் மீதான ஜிஎஸ்டி வரியை திரும்பப்பெறப்பட்டுள்ளது. 
 
# ஏ.சி ரெஸ்டாரண்ட்களுக்கான ஜிஎஸ்டி 18%-ல் இருந்து 12% ஆக குறைப்புக்கப்பட்டுள்ளது. 
 
# இணக்க முறையில் வரி செலுத்தும் சிறு வணிகர்களின் உச்ச வரம்பு ரூ.75 லட்சத்திலிருந்து ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
 
மேலும் அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் நவம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.