1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:44 IST)

தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரை கடன்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணத்தால் வறுமையில் உள்ள ஏழை எளியவர்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இதுவரை தங்க நகைகளை மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே வங்கிகளில் கடன் கொடுத்து வந்த நிலையில் இனி 90 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார் 
 
சாமானிய மக்கள் பெரும் தங்க நகைக்கடன்களில் தங்க நகையின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதா ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஏழை எளிய மக்கள் தங்க நகைகளை அடமானம் வைத்து 90 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த அறிவிப்பால் தனியார் வங்கிகள் மற்றும் அடமான கடைகளில் அதிக வட்டிக்கு தங்க நகைகளை அடமானம் வைப்பவர்களின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது