1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 6 ஜூன் 2015 (13:40 IST)

பாலியல் பலாத்காரம் எல்லாம் சகஜம்தான்: சொல்வது கோவா அமைச்சர் திலீப் பாருலேகர்

கோவாவில் பாலியல் பலாத்காரம் எல்லாம் சகஜம்தான் என, அம்மாநில அமைச்சர் திலீப் பாருலேகர் கருத்து தெரிவித்துள்ளதற்கு, பல்வேறு தரப்பிலும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
கடந்த திங்கள்கிழமை அன்று, டெல்லியைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் கோவாவில் சுற்றுலா சென்ற போது, காவல்துறையினர் வேடமிட்டு, 5 பேர் கொண்ட கும்பலால்  பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்டனர். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 பேர் கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திலீப் பாருலேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
கோவா போன்ற சுற்றுலாத் தலங்களில், இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமானதுதான். பாதிக்கப்பட்ட அந்த 2 பெண்கள், கோவாவைச் சேர்ந்தவர்கள் இல்லை. டெல்லியைச் சேர்ந்தவர்கள். இந்த செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் அப்பாவிகள். அவர்களுக்கு எதிராக குறைந்த அளவு குற்றங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
 
கோவா அமைச்சரின் இந்த பேச்சு, கோவா மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே வேலையில் பெரும் சர்ச்சையும் கிளப்பியுள்ளது. அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சுக்கு, காங்கிரஸ் மற்றும் பெண்கள் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.