1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 26 மார்ச் 2017 (13:40 IST)

மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 8 ஆசிரியர்கள்!

மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 8 ஆசிரியர்கள்!

ராஜஸ்தான் மாநிலத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 13 வயது மாணவியை கடந்த இரண்டு ஆண்டுகளாக 8 ஆசிரியர்கள் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதனால் அந்த மாணவி தற்போது கர்ப்பமடைந்துள்ளார்.


 
 
ராஜஸ்தான் மாநிலம் பைகானூர் அருகே உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார் பாதிக்கப்பட்ட 13 வயது மாணவி. இவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதால் கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை எடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து மாணவியை பரிசோதித்ததில் புற்றுநோய் பாதிக்கப்பட்ட மாணவி கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதனையடுத்து மாணவியிடம் விசாரித்ததில் ஆசிரியர்கள் அந்த மாணவியை பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
 
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தனது பள்ளியில் உள்ள 8 ஆசிரியர்கள் இரண்டு வருடமாக தன்னை மிரட்டி பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக எடுத்து அடிக்கடி பலாத்காரம் செய்து வருவதாக கூறியுள்ளார் பாதிக்கப்பட்ட சிறுமி.
 
மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு அதனை வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் ஆசிரியர்கள். இதனால் மாணவி பயந்து இது தொடர்பாக போலீஸ் புகார் அளிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது மாணவி கர்ப்பம் அடையும் நிலைக்கு பிரச்சனை பெரிதாகிவிட்டதால் அந்த ஆசிரியர்கள் மீது மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.