செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (10:47 IST)

பெண்ணின் காதில் ஸ்பைடர்; உயிரோடு வெளிவரும் வைரல் வீடியோ!

பெங்களூருவில் உள்ள ஹெபல் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தன்னுடைய வீட்டில் உள்ள வராண்டாவில் மதிய வேளை  நேரத்தில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது திடீரென்று தலை வலித்துள்ளது. அது மட்டுமின்றி வலது காதின் உள்ளே ஏதோ  ஒரு கூச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

 
இதனால் அவர் தனது கை விரல்களை வைத்து உள்ளே ஏதோ இருப்பதை உணர்ந்து சரி செய்து பார்த்துள்ளார், சரியாகவில்லை. நேரம் அதிகமாக, அதிகமாக தலைவலியும் அதிகமாகி கொண்டே வந்துள்ளது. இதனால் அப்பெண்ணின் கணவர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது  காதில் ஸ்பைடர் என்று அழைக்கப்படும் எட்டுக் கால் பூச்சி (சிலந்தி) இருப்பது தெரியவந்துள்ளது.
 
மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், காதின் உள்ளே பூச்சி இருந்த காரணத்தினாலே தலை வலி ஏற்பட்டுள்ளது. இதனால் காதிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளனர். தற்போது அப்பெண்ணின் காதிலிருந்து எட்டுக்கால் பூச்சி  வெளியே வரும் வீடியோ கமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.